சென்னைக்கு அடையாளம் கொடுத்தவர்கள் யார்? சென்னையில் வாழும் மக்கள் தொகை எவ்வளவு? இந்த கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் பதில் அளித்து பார்த்தால் ஒரு உண்மை புலனாகும். சென்னை என்று சென்னையில் எந்த பகுதியையும் அடையாளம் காட்ட முடியாது. சென்டிரல், கோயம்பேடு, என்று தான் கூறுவோம். ஒட்டு மொத்தமாக சென்னை என்று பலர் சொல்லி வருகிறேhம்.
மிகப்பெரிய தொழில் அதிபர்கள், சினிமாதுறை, ஐ,டி துறை என்று எந்த துறையை எடுத்தால[ம் அதில் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களே அதிகம் இடம் பிடித்து இருக்கிறhர்கள், பிசினஸ் என்று பார்த்தால் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சென்னையை ஆக்கரமித்து இருக்கிறhர்கள்.
சரி மேலே எழுப்பிய கேள்விகளுக்கு பதில் என்ன?
சென்னைக்கு யாரும் அiடையாளம் கொடுக்கவில்லை. சென்னை தான் இங்கு வந்தவர்களுக்கு அடையாளம் கொடுத்து இருக்கிறது. அது சினிமாவாக இருந்தாலும், தொழில்துறையாக இருந்தாலும், இது உண்மை. சென்னையின் மக்கள் தொகையில் அசல் அல்லதாவர்கள் தான் அதிகம். முகவரி இல்லாதவர்களுக்கும் சென்னை என்று முகவரி அளித்தது சென்னை தாய் தான். அந்த வகையில் மக்களை வளர்த்த மகராசி சென்னை தாய்.
வளர்த்த சென்னை தாய்க்கு இன்றைக்கு உச்சத்தில் இருபப்பவர்கள் என்ன செய்ய போகிறhர்கள்....
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment